சுடச்சுட

  

  கடலூர் அருகே மாணவிகளை கேலி செய்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

  கடலூரை அடுத்த குண்டுஉப்பலவாடியைச் சேர்ந்த சில மாணவிகளை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மாணவர்கள் பாலச்சந்தர், நவீன்குமார், கட்டடத் தொழிலாளி தமிழ்வேந்தன் ஆகியோரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கினராம்.

  இவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

  சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் மு.ராமமூர்த்தி, கடலூர் வட்டாட்சியர் எழிலன், ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் டி.சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியைத் தொடர்ந்து மறியல் முயற்சி கைவிடப்பட்டது.

  இதுதொடர்பாக கட்டடத் தொழிலாளி தமிழ்வேந்தன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ரெட்டிச்சாவடி போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த அருள், கவி என்ற ராமகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

  மேலும், அப்பகுதியில் பிரச்னை ஏற்படாமலிருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai