சுடச்சுட

  

  கடலூர் கலை அருவி நாடக மன்றம் சார்பில் கடலூர் நகர அரங்கில் நாடக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோ. ஐயப்பன் தலைமை தாங்க, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் துவக்கி வைத்தார்.
   இதில், என் இனிய இளவரசி என்ற தலைப்பில் பல்லவ நாட்டில் கலைஞனுக்கும் இளவரசிக்கும் இடையே நடந்த காதலை மையமாக கொண்ட நாடகம் நடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேல்மலையனூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனின் மகிமையை விளக்கும் சிவன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் கதையைக் கொண்ட அருள்தருவாள் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி என்ற நாடகமும் நடித்துக் காண்பிக்கப்பட்டது.
   இதில், நடிகர்கள் எஸ்.ஜெயசீலன், நட.ராமமூர்த்தி, எஸ்.என்.ஏழுமலை, ஏ.சகாயராஜ், பி.ராமமூர்த்தி, டி.நந்தகோபால் நடிகைகள் கே.வீரம்மாள், எஸ். பிபியானாமார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   விழாவுக்கான ஏற்பாடுகளை நாடக மன்றச் செயலர் ப. செல்வநாதன், தலைவர் வ. ஜெயராமன், புதுவை மாநில படைப்பாளிகள் கூட்டமைப்பு பொதுச்செயலர் எம்.எஸ்.ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai