Enable Javscript for better performance
கல்லூரிப் பேராசிரியை விவகாரம்: உள்ளிருப்பு போராட்டம் நீடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரிப் பேராசிரியை விவகாரம்: உள்ளிருப்பு போராட்டம் நீடிப்பு

    By  கடலூர்,  |   Published on : 17th December 2014 01:21 PM  |   அ+அ அ-   |    |  

    தனியார் கல்லூரி பேராசிரியையை இடமாற்றம் செய்தது தொடர்பாக மாணவிகள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     கடலூரில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி பேராசிரியை பி. சாந்தியை அக் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகம் கடந்த நவம்பர் 26-ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்தது. இதனைக் கண்டித்து கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இந்நிலையில், பேராசிரியைக்கு ஆதரவாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவிகள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதேபோன்று இந்த தனியார் நிறுவனத்தின் மற்ற கல்லூரிகளிலும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் டி.அரசன், செயலர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai