சுடச்சுட

  

  குறவர் பழங்குடி மக்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதன் 16-ம் ஆண்டு விழா, குறவர் இனத்தின் மீது காவல்துறையின் அத்துமீறல் குறித்து தேசிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது, சங்கத்தின் மாநில பொதுச்செயலருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
   விழாவுக்கு மாநில செயல் தலைவர் எம். ஜெகநாதன் தலைமை வகித்தார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலர் ம.செ.சிந்தனைசெல்வன், மாவட்ட செயலர் பா. தாமரைச்செல்வன், நடிகர் விக்னேஷ், மீனவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பெரு. ஏகாம்பரம், இளைஞர் சமூக விழிப்புணர்வு இயக்க அமைப்பாளர் லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   விழாவில், குறவர் இனத்தவருக்கு உதவி செய்யும் வகையில் கண்ணகி அறக்கட்டளை துவக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. மாநில இளைஞரணி தலைவர் எம்.மூர்த்தி வரவேற்றார். மாவட்டச் செயலர் என்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai