Enable Javscript for better performance
சிதம்பரம் கருவூலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் கருவூலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

    By  சிதம்பரம்,  |   Published on : 17th December 2014 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் துணைக்கருவூல அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சிதம்பரம் வட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
     சிதம்பரம் வட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவர் பொன். மணி தலைமை வகித்தார். சிவராமன் வரவேற்றார். பொருளாளர் கோ. ராமமூர்த்தி நிதிநிலை அறிக்கை படித்தார். நிர்வாகிகள் சந்தானம், கோபாலகிருஷ்ணன், கலியமூர்த்தி, முருகன், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் க.சின்னசாமி நன்றி கூறினார்.
     தீர்மானங்கள்: சிதம்பரம் துணைக் கருவூல அலுவலகத்தில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் இதரப் பணப்பயன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
     எனவே தமிழ்நாடு அரசு மாநில கருவூல ஆணையாளர் மேற்கண்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai