Enable Javscript for better performance
மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை

    By  கடலூர்,  |   Published on : 17th December 2014 12:42 PM  |   அ+அ அ-   |    |  

    திட்டக்குடி தாலுகாவில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
     திட்டக்குடி வட்டாரத்தில் 9, 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சென்னையைச் சேர்ந்த உல்லாஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கொளஞ்சி தலைமை தாங்கினார். ஆசிரியர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
     அறக்கட்டளை தலைமை திட்ட மேலாளர் தேவ்ஆனந்த், 50 பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம் ரூ. 50 ஆயிரம் வழங்கிப் பேசினார். விழாவில், ஆசிரியர்கள் நெடுஞ்செழியன், ஜெயா, கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
     ஆசிரியர் குணசேகரன் வரவேற்க ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai