சுடச்சுட

  

  வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு கோரி  துண்டுப் பிரசுரம் விநியோகம்

  By  கடலூர்,  |   Published on : 17th December 2014 12:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக பொதுமக்களின் ஆதரவு கோரி கடலூரில் செவ்வாய்க்கிழமை துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.
   அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கங்களும் ஊதிய உயர்வு மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் தொடர்பாக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
   எனினும் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறாததைத் தொடர்ந்து விரைவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
   எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான காரணங்களை பொதுமக்களிடம் விளக்கும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடலூர் பேருந்து நிலையத்தில் கடலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் தொமுச தலைவர் பி.பழனிவேல் தலைமையில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
   இதில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிலை, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள், அரசு வழங்காமல் உள்ள சலுகைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த துண்டுப் பிரசுரம் விநியோகம் புதன்கிழமை (டிசம்பர் 17) சிதம்பரத்திலும், வியாழக்கிழமை (டிசம்பர் 18) திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளிலும், டிசம்பர் 19-ம் தேதி பண்ருட்டி, வடலூர், நெய்வேலி பகுதியிலும் நடைபெறு
   கிறது. இதில், சிஐடியு பொதுச்செயலர் எம். முத்துக்குமரன், தலைவர் ஜி.பாஸ்கரன், பிடிஎஸ் தலைவர் டி.ஜெய்சங்கர், எல்எல்எப் பொதுச்செயலர் எம். ஞானப்பிரகாசம், ஐஎன்டியுசி பொதுச்செயலர் பி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai