சுடச்சுட

  

  அரசு அலுவலகங்களில் பொதுமக்களுடைய இதுவரை தீர்க்க முடியாத பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழக அரசால் "தமிழ்நாடு புதுமை புகுத்தல் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட

  ஆட்சியர் தெரிவித்தார்.

  கடலூர் மாவட்ட அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பேசுகையில்,

  மாநில அளவில் அரசு அலுவலகங்களில் பொதுமக்களுடைய, இதுவரை தீர்க்க முடியாத பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், புதிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களை எளிய முறையில் உருவாக்கி வடிவமைத்து செயல்படுத்துவதற்காக அரசால் "தமிழ்நாடு புதுமை புகுத்தல் திட்டம்' ஆரம்பிக்கப்பட உள்ளது.

  இந்தத் திட்டம் முற்றிலும் அரசு அலுவலகங்களில் புதுமையினை புகுத்தும் வண்ணம் அமைய வேண்டும்.

  மேலும், வெவ்வேறு துறைகளில் பல வடிவங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றி அதில் சில புதுமைகளை புகுத்தி அரசு அலுவலகங்களின் மூலம் வெற்றிகரமாக நடத்த அனைத்துத் துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், திட்ட இயக்குநர் மகேந்திரன், சிதம்பரம் சார் ஆட்சியர் அரவிந்த், பயிற்சி உதவி ஆட்சியர் ஆலிப்ஜான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) ரவிக்குமார் உள்ளிட்ட

  அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai