சுடச்சுட

  

  இரட்டைக் கொலை குற்றவாளிக்கு குண்டர் தடுப்புக் காவல்

  By சிதம்பரம்  |   Published on : 18th December 2014 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் இரட்டைக் கொலை வழக்கு குற்றவாளியான சீர்காழியைச் சேர்ந்த சத்யா (32) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

  சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேடு பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் குமார் (34), அவரது தம்பி ராஜேஷ் (32) ஆகியோர் கடந்த 2-9-2014 அன்று வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

  இக்கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (36), சிதம்பரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த சுரேந்தர் (35), அண்ணாமலை நகர் மண் ரோட்டைச் சேர்ந்த கஜேந்திரன் (29), பட்டாபிராமன் (25), சீர்காழி ரயிலடித் தெருவைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யராஜ் (32), யானை கார்த்தி (31), திருவாரூர் மாவட்டம், மணவாளநல்லூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (30) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கடலூர், வேலூர், திருச்சி மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  இவர்களில் சுரேந்தர், கஜேந்திரன், பட்டாபிராமன், சந்தோஷ்குமார் ஆகிய 4 பேர் ஏற்கெனவே, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

  இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள சீர்காழியைச் சேர்ந்த சத்யராஜ் (32) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கடலூர் மாவட்ட எஸ்.பி. ராதிகா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

  அதனடிப்படையில், சத்யராஜை ஓராண்டு சிறையில் அடைக்க ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் உள்ள சத்யராஜை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கும் உத்தரவை அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் சிறை கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai