சுடச்சுட

    

    சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், ஆதிசக்தி ஏஜென்சி, எம்எம்ஐ புரமோட்டர் ஆகியவை சார்பில் சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இந்த கண் சிகிச்சை முகாமில் 236 பேர் பங்கேற்று இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 51 பேர் ஐஒஎல் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    முகாமை சிதம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஏ.கந்தவேல் கண்ணாடிகளை வழங்கினார். மண்டலத் தலைவர் எம்.லலித்குமார், வட்டாரத் தலைவர் சி.சமுத்திரராஜ்குமார், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் ஜி.ஜே.முருகன், துணைச் செயலாளர் எம்.ஷாகுல்ஹமீது, பொருளாளர் பி.நாகராஜன் உள்ளிட்டோர்

    பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai