சுடச்சுட

  

  இழப்பீட்டுத்தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

  By கடலூர்,  |   Published on : 18th December 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இழப்பீட்டுத் தொகை வழங்காததால் கடலூரில் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

  விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மடப்பட்டைச் சேர்ந்தவர் மா.கந்தன் (38). இவர், கடந்த

  2009-ம் ஆண்டு, டிசம்பர் 27-ம் தேதி உளுந்தூர்பேட்டை-பண்ருட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருநாவலூர் அருகே சென்றபோது அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

  இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

  மேலும், விபத்து இழப்பீட்டுத் தொகை கோரி சரஸ்வதி கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் ரூ.4.57 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அத்தொகை செலுத்தப்படாததைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

  வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, இழப்பீட்டுத் தொகையை 6 சதம் வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சம் வழங்க உத்தரவிட்டார். மேலும், இத்தொகையை செலுத்தவில்லையெனில் பேருந்தை ஜப்தி செய்யலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

  இதையடுத்து, இழப்பீட்டுத் தொகை வழங்காத சேலம் கோட்ட பேருந்தை மனுதாரரின் வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுடன் புதன்கிழமை சென்று கடலூர் பேருந்து நிலையத்தில் ஜப்தி செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai