கல்லூரி மாணவிகள் உண்ணாவிரதம்
By கடலூர், | Published on : 18th December 2014 03:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர் தனியார் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் கடலூரில் மகளிர் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரி பேராசிரியரும், திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான பி.சாந்தி கடந்த நவம்பர் 26-ம் தேதி காஞ்சிபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கமும், பேராசிரியரை மீண்டும் கடலூரில் பணியமர்த்தக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் குதித்தன.
உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், பேரணி, அறக்கட்டளை கல்லூரிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை இக் கல்லூரி மாணவிகள் வகுப்புக்குச் செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதோடு உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.