சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  1-9-2012 ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படாததை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

  போராட்டத்துக்கு தொழிற்சங்க நிர்வாகி பால.செந்தில்நாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் டி.ஜெயசுந்தர், செந்தில்மோகன், ராஜேந்திரன், எம்.முத்துக்குமரன், மணிவண்ணன், டி.ஜெயசங்கர், ரா.வீரமணி, ஜான்விக்டர், ஜெயபால், ரா.மணிமாறன், ராமச்சந்திரன், பி.ஞானப்பிரகாசம், எஸ்.ராஜாராமன், வி.சேகர், சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai