சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் தேமுதிகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க் கட்சிக் கொறடா வி.சி.சந்திரகுமார் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலர் சசிக்குமார், பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து, மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், நிர்வாகிகள் சிவானந்தம், செம்பை, ராஜவன்னியன், முத்து, நகர்மன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விருத்தாசலம் அரசு பொதுமருத்துவமனையின் அவல நிலையைக் கண்டித்தும், மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி ஆதாராத்தை பெருக்காததைக் கண்டித்தும், பால் விலை, மின்கட்டண உயர்வுக்குக் காரணமான தமிழக அரசைக் கண்டித்தும் குரல் எழுப்பப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai