சுடச்சுட

    

    பண்ருட்டியில் சூட்கேஸால் பரவிய வெடிகுண்டு பீதி

    By கடலூர்  |   Published on : 18th December 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸால் வெடிகுண்டு பீதி பரவியது.

    பண்ருட்டி நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பண்ருட்டி பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடலூர் சாலையில் திருமண மண்டபம் அருகிலுள்ள தரைப் பாலத்தின் கைப்பிடி சுவரின் மீது ஒரு பெரிய சூட்கேஸ் இருப்பதைக் கண்டனர். பாலத்தை தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.

    இதனால், அந்த வழியாக யாரையும் செல்ல விடாமல் தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதுகுறித்து, தகவலறிந்த, பண்ருட்டி காவல் ஆய்வாளர் சிவசுப்பு, உதவி ஆய்வாளர் அமலா மற்றும் போலீஸார் விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சூட்கேஸ் குறித்து போலீஸார் பாலத்தின் அருகில் உள்ள பைகள் தயாரிக்கும் கடை உரிமையாளரிடம் விசாரித்த போது, அந்த சூட்கேûஸ கடை முன் மறந்து விட்டுச் சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த சூட்கேûஸ போலீ,ôர் திறந்து பார்த்தனர். அதில் துண்டு, துண்டான லெதர், ஜிப்புகள் மற்றும் வெட்டப்பட்ட துணிகள் இருந்தன. அதன் பிறகே போலீஸார் நிம்மதி அடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai