Enable Javscript for better performance
பரங்கிப்பேட்டையில் 155 மில்லி மீட்டர் மழை- Dinamani

சுடச்சுட

    

    பரங்கிப்பேட்டையில் 155 மில்லி மீட்டர் மழை

    By கடலூர்,  |   Published on : 18th December 2014 03:24 AM  |   அ+அ அ-   |    |  

    பரங்கிப்பேட்டையில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 155 மி.மீ. மழை பதிவானது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் புதன்கிழமை மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதலே மழை பெய்தது. மழை பெய்வதும், பின்னர் சிறிது நேரம் விட்டு மீண்டும் மழை பெய்வதுமாக இருந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 155 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

    இதர பகுதிகளில் பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்): சிதம்பரம் 69, கடலூர் 24.70, காட்டுமன்னார்கோவில் 42, தொழுதூர் 5, ஸ்ரீமுஷ்ணம் 14, விருத்தாசலம் 7.40, பண்ருட்டி 19, கொத்தவாச்சாரி 27, கீழச்செருவாய்

    7, வானமாதேவி 25.60, அண்ணாமலை நகர் 44.20, சேத்தியாத்தோப்பு 16.20, புவனகிரி 28, லால்பேட்டை 20, மீ.மாத்தூர் 19, காட்டுமயிலூர் 17, வேப்பூர் 22, குப்பநந்தம் 5.80, லாக்கூர் 9, பாலந்துறை 6 மில்லி மீட்டர் பதிவாகியிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai