Enable Javscript for better performance
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தர்னா

    By கடலூர்,  |   Published on : 18th December 2014 03:24 AM  |   அ+அ அ-   |    |  

    ஊதியம் வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

    கடலூர் தொலைத்தொடர்பு மாவட்ட சங்கங்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கடலூர் பிஎஸ்என்எல் அலுவலக பொதுமேலாளர் அலுவலகம் முன் தர்னா நடைபெற்றது. போராட்டத்திற்கு ஏ.அண்ணாமலை, ஆர்.செல்வம்

    ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு 2 மாதமாக கூலி வழங்கப்படாததை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தியும் கோஷம்

    எழுப்பினர். இதில், சங்க நிர்வாகிகள் கே.டி.சம்பந்தம், இரா.ஸ்ரீதர், எம்.பாரதிதாசன், ஜி.ரங்கராஜீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai