Enable Javscript for better performance
மின் சிக்கன விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மின்சக்தி சிக்கன வாரத்தை முன்னிட்டு கடலூரில் புதன்கிழமை மின் சிக்கன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கடலூர் பகிர்மான வட்டத்தின் சார்பில் கடலூரில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழா கடந்த 14-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு பொதுமக்களிடையே மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மின்கழக ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி உழவர்சந்தையில் தொடங்கியது. பேரணிக்கு விழுப்புரம் மண்டல தலைமைப் பொறியாளர் வி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.

    கடலூர் மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி முன்னிலை வகித்தார்.

    பேரணி அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் மின் சிக்கனம் குறித்து பேசப்பட்டது. மேலும், தேசிய மின்சக்தி சிக்கன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், செயற்பொறியாளர்கள் ஜி.காமராஜ், லினா, எஸ்.பழனிராஜ், ஜெயராமன், பாலசுப்பிரமணியன், நடேசன், ஆர்.ஐயப்பன், சம்பத்மகாராஜா உள்ளிட்டோர்

    பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai