சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்தார்.

    பண்ருட்டியை அடுத்த வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் வாசு (70), விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து, புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai