சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, கீழணை ஆகியவற்றை மத்திய அரசின் அணை பாதுகாப்புக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றில் மழைக் காலங்களில் வெளியேறும் நீரின் அளவைக் கண்டறியவும், வீராணம் ஏரியில் அணைக்கட்டு கட்டுவதற்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

  இதனை ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசின் அணை பாதுகாப்புக் குழுத் தலைவர் மிடாய் தலைமையில் உறுப்பினர்கள் புர்பா, சுப்புராவ், மண்டே ஆகியோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் வந்தனர்.

  பின்னர், இக்குழுவினர் புதன்கிழமை வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, கீழணை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். வீராணம் ஏரியின் உள்ள நீர் கொள்ளளவு, இருப்பு விவரங்கள், மழைக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரிநீர் விவரங்கள் குறித்து பொதுப்பணித் துறையினரிடம் கேட்டறிந்தனர்.

  ஆய்வின் போது, கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், குணசேகரன், உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், உமா ஆகியோர்

  உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai