சுடச்சுட

  

  ஸ்ரீபிரம்ம ராயர் கோயிலில் 61 தல விருட்சங்கள் நடும் பணி

  By சிதம்பரம்  |   Published on : 18th December 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் உள்ள பிரம்ம ராயர் கோயிலில் தமிழகத்தில் உள்ள 61 தல விருட்சங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

  திருமுறை பாடல்பெற்ற 274 கோயில் (தலங்கள்)களின் தலவிருட்சங்கள் 61. சிதம்பரம் நகரில் முதல் முயற்சியாக 61 தலவிருட்சங்களை ஒரே இடத்தில் நடும் பணியை பிரம்ம ராயர் கோயிலில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர், தில்லை திருமுறை கழகத்தினர் மற்றும் கட்டடப் பொறியாளர் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர்.

  இதுவரை, பிரம்ம ராயர் கோயில் வளாகத்தில் 44 தல விருட்சங்கள் நடப்பட்டுள்ளன. மற்ற தல விருட்சங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  இந்தப் பணியில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த முனைவர் பி.பன்னீர்செல்வம்.

  கு.சேதுசுப்பிரமணியம், சிதம்பரம் கட்டடப் பொறியாளர் சங்கம் எம்.புருஷோத்தமன், கே..ராஜா, தில்லைத் திருமுறை மன்றம் வி.முருகையன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai