Enable Javscript for better performance
ஆனித் திருமஞ்சன தரிசனத்தை 2 மணிக்குள் முடிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஆனித் திருமஞ்சன தரிசனத்தை 2 மணிக்குள் முடிக்க உத்தரவு

    By சிதம்பரம்,  |   Published on : 19th December 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜனவரி 5-ம் தேதி நடைபெறவுள்ள ஆனித் திருமஞ்சன தரிசனத்தை பிற்பகல் 2 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பொதுதீட்சிதர்களுக்கு உதவிஆட்சியர் எம்.அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் டிசம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

    ஜனவரி 4-ம் தேதி தேர்த் திருவிழாவும், 5-ம் தேதி ஆருத்ரா தரிசன உற்சவமும் நடைபெறுகிறது உற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்வது குறித்து உதவிஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுதீட்சிதர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு உதவி ஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜி.அன்புச்செல்வி, தனி வட்டாட்சியர் அனந்தராமன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதர், நகர்மன்ற உறுப்பினர் நடனசபாபதி தீட்சிதர், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ், போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.ரவிச்சந்திரன், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், மின்வாரிய உதவிப் பொறியாளர் ஜி.நடராஜன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜாகீர்உசேன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத்துக்கு கண்காணிப்புக் கேமிரா பொருத்துவது, தாற்காலிக கழிப்பறைகள் அமைப்பது, பிற்பகல் 2 மணிக்குள் தரிசனத்தை முடிப்பது, தேர்த் திருவிழா மற்றும் தரிசனத்தின் போது போதிய போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது, போக்குவரத்து மாற்றம் செய்வது, தேர் மற்றும் தரிசன நாள்களில் அசைவ ஹோட்டல்கள மூடுவது, மதுபானக் கடையை மூட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது, நகராட்சி நிர்வாகம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, தயார் நிலையில் தீயணைப்புத் துறை வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றை கோயில் வளாகத்தில் நிறுத்துவது, குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலைகளை சீரமைப்பது, அன்னதானம் வழங்குபவர்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பத்மநாபனிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai