சுடச்சுட

  

  இயற்கை சீற்றம் பாதிப்பு: 3 மாநிலங்களுக்கு என்எல்சி நிதியுதவி

  By கடலூர்,  |   Published on : 19th December 2014 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு என்எல்சி நிர்வாகம் ரூ. 2.50 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

  மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம் பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

  ஆந்திரத்தில் அண்மையில் வீசிய ஹூட்ஹூட் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைப்புப் பணிகள் மேற்கொள்ள, என்எல்சி நிறுவனம் ரூ.1 கோடியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. ஹைதராபாத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பி. சுரேந்திரமோகன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கினார்.

  முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கும் வகையில் அம்மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு என்எல்சி ரூ.1 கோடி வழங்கியுள்ளது.

  கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் அம்மாநிலத்தின் முதன்மை ஆணையர் லோகேஷ் டத் ஜாவிடம் காசோலையை வழங்கினார். அதேபோன்று ஹூட்-ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸாவுக்கு என்எல்சி சார்பில் ரூ. 50 லட்சம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வழங்கப்பட்டது. ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் என்எல்சி தலைவர் இதற்கான காசோலையை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் வழங்கினார்.

  இந் நிகழ்வுகளின்போது என்எல்சி மனிதவளத் துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சார்யா உடனிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai