சுடச்சுட

  

  கடலூரில் பெற்றோரால் விட்டுச் செல்லப்பட்ட 7 நாள் பெண் சிசு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

  கடலூர் உழவர்சந்தையில் வியாழக்கிழமை காலையில் வழக்கம் போல, வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பெண் தனது கையிலிருந்த பெண் சிசுவை அங்கிருந்த வியாபாரியிடம் கொடுத்து விட்டு இயற்கை உபாதை கழித்து வருவதாக கூறிச் சென்றார். ஆனால், அவர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் ஜெயந்தி, சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டார். பின்னர், அக்குழந்தையை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

  மேலும், மீட்கப்பட்ட

  குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai