சுடச்சுட

  

  கடலூர் காங்கிரஸ் பவனம் யாருக்கு? பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை

  By கடலூர்,  |   Published on : 19th December 2014 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்த நேரு பவனம் யாருக்கு என்பது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கடலூர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகமாக பாரதியார் சாலையில் உள்ள நேரு பவனம் உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் காங்கிரஸில் இருந்து விலகி தனிக் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டதும், நேரு பவனம் யாருக்குச் சொந்தம் என்பதில் வாசன் ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் நுழையத் தடை விதிக்கப்பட்டதோடு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

  பின்னர், நேரு பவனம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்ய கடந்த நவம்பர் 19-ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து, 2-வது கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது.

  கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோட்டாட்சியர் மோ. ஷர்மிளா தலைமை வகித்தார். காங்கிரஸ் தரப்பில் மாவட்டத் தலைவர் எம்.ஆர். ராதாகிருஷ்ணன், வழக்குரைஞர்கள் குருராஜ், முத்துக்குமாரும், த.மா.கா. சார்பில் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், வழக்குரைஞர்கள் ஏ.எஸ்.சந்திரசேகரன், பாலமுருகன் ஆகியோரும் பங்கேற்று தங்கள் தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

  எனினும், இதில், உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து டிசம்பர் 29-ம் தேதிக்கு அடுத்த விசாரணையை கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா ஒத்திவைத்தார்.

  இதுகுறித்து த.மா.காவைச் சேர்ந்த பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் கூறுகையில், நேரு பவனம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சொத்தல்ல. தென்னாற்காடு மாவட்ட காங்கிரஸின் சொத்து. இதனை கடந்த 70 ஆண்டுகளாக நாங்கள் தான் பராமரித்து வருகிறோம்.

  இந்திரா காந்தி பதவி காலத்தின்போது காங்கிரஸ் பிரிந்த போதும், ஜனதா கட்சி உதயமான போதும், மூப்பனார் தலைமையில் த.மா.கா. உருவான போதும் இக்கட்

  டடம் அகில இந்திய காங்கிரஸ் வசம் ஒப்படைக்கவில்லை. எனவே, இக்கட்டடம் எங்களுக்கே சொந்தமானது என்றார்.

  காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 1950 முதல் இக்கட்டடம் கட்சி பெயரில் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.

  அதற்கான உரிமைச் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி பெயரிலேயே சொத்து வரி, நகராட்சி வரி, மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் சொத்தை தனி நபருக்கு விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை என்றார்.

  கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா கூறுகையில், இந்த இடம் 1950-ல் தென்னாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி என்ற பெயருக்கு நில உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  எனவே, தென்னாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி யாருக்கு உரிமையுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது. எனவே, அடுத்த விசாரணை டிசம்பர் 29-ம் தேதி நடைபெறும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai