சுடச்சுட

    

    கரும்பு நிலுவைத் தொகை கோரி முற்றுகைப் போராட்டம்

    By கடலூர்  |   Published on : 19th December 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.500 கோடி பாக்கி வைத்துள்ளதை உடனடியாக வழங்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் டிசம்பர் 23-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, அந்தக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

    தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள், தமிழக அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை முழுமையாக விவசாயிகளுக்கு தராமல் ரூ.500 கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ளது.

    விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2,650-ல் ரூ.300ஐ குறைத்து வழங்குகின்றன. இந்த வகையில் விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.500 கோடி.

    கரும்பு விவசாயிகளுக்கு 2013-2014ம் ஆண்டு வழங்க வேண்டிய தமிழக அரசு நிர்ணயித்த ரூ.2,650 தொகையை முழுமையாக வழங்க வேண்டும். 2014-2015ம் ஆண்டுக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ.3,500 என்று அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட

    5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் சர்க்கரை ஆலைகள் முன்

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்

    சார்பில் டிசம்பர் 23-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai