சுடச்சுட

  

  கல்விக் கட்டண போலி ரசீது கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி

  By சிதம்பரம்  |   Published on : 19th December 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களிடம் போலி ரசீது கொடுத்து கல்விக் கட்டணம் ரூ. 2 லட்சத்து 977 கையாடல் செய்த இளநிலை உதவியாளர் மீது அண்ணாமலை நகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு வட்டுகப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஏ.ஹெரிக்ஜெகந்நாதன். சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இவர், கடந்த 10-2-2014 முதல் 24-7-2014 வரை மாணவர்கள் கட்டிய கல்விக் கட்டணத்துக்கு போலி ரசீது கொடுத்து ரூ.2 லட்சத்து 977 ரூபாய் கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.

  இதுகுறித்து, கல்லூரி முதல்வர் குப்பன் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் இளநிலை உதவியாளர் ஹெரிக்ஜெகந்நாதன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai