சுடச்சுட

    

    சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் இந்து கனவு சிறகுகள் மையம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    மன்ற பொருளாளர் எஸ்.சிவராமசேது தலைமை வகித்தார். அரிமா கே.சேதுமாதவன் முன்னிலை வகித்தார். மன்றச் செயலாளர் மு.ஞானம் முகாமைத் தொடங்கி வைத்தார்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவர் பி.கே.கோவிந்தராஜன் தலைமையில் மருத்துவர்கள் ஆர்.அபிஷேக், கே.கிரிஸ்டா, எஸ்.பிரவீண், ஜே.அரவிந்த், டி.கே.செந்தில்முருகன், ஏ.கண்ணன், எஸ்.ராம்குமார் கொண்ட மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    முகாம் ஏற்பாடுகளை காந்தி மன்றத் தலைவர் பொன்.குஞ்சிதபாதம், இந்து கனவு சிறகுகள் மைய அமைப்பாளர் என்.எத்திராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai