சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகளை ஆட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    நெல்லிக்குப்பத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கால்நடை மருந்தகக் கட்டடம், மேல்பட்டாம்பாக்கத்தில் கால்நடை மருத்துவமனை, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், பகண்டை கிராமத்தில் ரூ.26.5 லட்சத்தில் புதிய கால்நடை மருந்தகக் கட்டடம், பண்ருட்டியில் கால்நடை மருத்துவமனை, தொரப்பாடி பேரூராட்சியில் ரூ.11.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கால்நடை மருந்தக கட்டடம், மருந்துகள் வைப்பு அறை மற்றும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, பணிகளை விரைந்து முடிப்பதற்கும், மருத்துகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் கிராமத்தில் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கால்நடை மருந்தக கட்டடம், வடலூரில் கால்நடை மருத்துவமனை, வடலூரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி கட்டடம், மாணவர் தங்கும் அறை, சமையல் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது மாணவர்களிடம் கல்வித் தரம் குறித்தும், விடுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் சுகுமாறன், துணை இயக்குநர் சுகுமார், பண்ருட்டி வட்டாட்சியர் மோகன், அண்ணாகிராமம் ஒன்றியக்குழுத் தலைவர் சுந்தரி முருகன் உள்ளிட்டோர்

    உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai