சுடச்சுட

    

    கடலூரில் கோயிலில் நகை திருடியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    கடலூர் புதுப்பாளையம் புதுத் தெருவில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை அதேபகுதியைச் சேர்ந்த ம.கோபிநாத் நிர்வகித்து வருகிறார்.

    வியாழக்கிழமை காலையில் கோபிநாத் கோயிலை திறந்து வைத்து விட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பிய போது ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்திருந்த ஒருவர் அம்மன் கழுத்தில் கிடந்த செயினை திருடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக கோபிநாத் பொதுமக்கள் உதவியுடன் தாலி திருடியவரை மடக்கிப்பிடித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் கடலூர் தட்சிணாமூர்த்தி நகரைச் சேர்ந்த கலியன் மகன் கணேசன்(38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கணேசனை

    கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த நகையை கைப்பற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai