சுடச்சுட

  

  சிதம்பரம் போலீஸார் 9 பேர்வேலூருக்கு திடீர் மாற்றம்

  By சிதம்பரம்  |   Published on : 19th December 2014 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் காவல் கோட்டத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மூவர் உள்பட 9 பேர், வேலூர் காவல் கோட்டத்துக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

  சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, மதிவாணன், தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சிதம்பரம் நகர தலைமைக் காவலர் பிரபாகரன், தாலுகா காவல் நிலைய தலைமைக் காவலர் சௌந்தரராஜன், சிதம்பரம் போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் செந்தில்குமார், புவனகிரி காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்முருகன், சிதம்பரம் முதல்வரின் தனிப் பிரிவு தலைமைக் காவலர் தமிழ்ச்செல்வன், விருத்தாசலம் கலால் காவல் நிலைய தலைமைக் காவலர் விவேகானந்தன் ஆகிய 9 பேரை வேலூர் காவல் கோட்டத்துக்கு திடீர் இடமாற்றம் செய்து கடலூர் மாவட்ட எஸ்.பி. ஏ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

  இவர்கள் ஜாதி ரீதியாக செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து

  இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாராங்கள்

  தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai