சுடச்சுட

  

  சேதமடைந்த காமராஜர் சிலை: சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை

  By சிதம்பரம்,  |   Published on : 19th December 2014 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரங்கிப்பேட்டையில் சேதமடைந்த நிலையில் உள்ள காமராஜர் சிலையை சீரமைக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

  பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயன் கோயில் பகுதியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் காமராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

  இந்தச் சிலை கடந்த சில நாள்களாக வலது கை உடைந்து காட்சியளிக்கிறது.

  சிதம்பரம் எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை சேதமடைந்த காமராஜர் சிலையை பார்வையிட்டு விரைந்து சிலையை சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  எம்.எல்.ஏ.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் வேல்முருகன், கரிகுப்பம் கிளைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai