Enable Javscript for better performance
துண்டுப் பிரசுரம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    போராட்டத்துக்கு ஆதரவு கோரி விருத்தாசலத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.

    போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் புதிய ஊதிய ஒப்பந்த முரண்பாடுகள் தொடர்பாக அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களிடம் போராட்டத்துக்கு ஆதரவு கோரி அனைத்துத் தொழிற் சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 15 முதல் 22 வரை துண்டுப் பிரசுரங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, விருத்தாசலத்தில், தொமுச கடலூர் மண்டலத் தலைவர் பழனிவேல் தலைமையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

    இதில், தொமுச பொருளாளர் செந்தில்நாதன், துணைச் செயலர் விஸ்வநாதன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலர் வீரமணி, தலைவர் ஜெய்சங்கர், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பாஸ்கர், பொதுச்செயலர் முத்துக்குமார், எல்.எல்.எஃப் பொதுச்செயலர் ஞானப்பிரகாசம், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் சாமிநாதன், கொளஞ்சி, எம்.எல்.எஃப் நிர்வாகி முத்துசரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai