சுடச்சுட

  

  பள்ளிக்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டம்

  By விருத்தாசலம்  |   Published on : 19th December 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலத்தை அடுத்த க.இளமங்கலம் கிராமத்தில் பள்ளிக்கு பூட்டு போட்டு கிராம மக்கள வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  க.இளமங்கலம் கிராமத்தில், 1962ஆம் ஆண்டு முதல் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும், கட்டட மேற்கூரை அடிக்கடி உடைந்து விழுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

  இந்நிலையில், விருத்தாசலம் பகுதியில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால், வகுப்பறைகளில் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், பள்ளிக்கு பூட்டு போட்டு, மாணவர்களை வெளியிலேயே நிறுத்திவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து, தகவலறிந்த கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார், வட்டாட்சியர் சு.சீனிவாசன் ஆகியோர் நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தரப்படும் எனத் தெரிவித்தார். அதுவரை, கிராம நூலகத்திலும், கிராம நிர்வாக அலுவலகத்திலும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

  இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai