சுடச்சுட

  

  பாமக தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் பண்ருட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

  பண்ருட்டி நகரச் செயலர் தி.நந்தகோபால் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் கணபதி, ராஜா, விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.

  மாவட்ட அமைப்புச் செயலர் கோதண்டபாணி வரவேற்றார். மாவட்டச் செயலர் ஆறுமுகம், மாநில துணைத் தலைவர் முருகவேல் கருத்துரை வழங்கினர்.

  அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும், மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அரசு மின் கட்டண உயர்வை பரிசீலிக்க வேண்டும்.

  அடிப்படை வசதி கோரி பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலக்தில் 26-ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai