சுடச்சுட

  

  பெண்ணாடம் அருகே பேருந்து மோதியதில் 5-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

  கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள துறையூரைச் சேர்ந்த மகாதேவன் மகள் கனகா (10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

  வியாழக்கிழமை மாலையில் டியூசன் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, நெய்வேலியிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மாணவி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவி கனகா அதே இடத்தில்

  உயிரிழந்தார்.

  இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகக் கூறி துறையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன், வட்டாட்சியர் தேவநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai