சுடச்சுட

    

    மாணவிக்கு பாலியல் தொல்லை:பள்ளித் தாளாளரின் கணவர் கைது

    By சிதம்பரம்,  |   Published on : 19th December 2014 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

    சிதம்பரம் அருகே சிவக்கம் கிராமத்தில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியின் தாளாளராக நெடுஞ்சேரி புத்தூரைச் சேர்ந்த திரிபுரசுந்தரி என்பவர் உள்ளார். இவரது கணவர் பாலகணேஷ் (32), புதன்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிக்கு சிறப்பு வகுப்புக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், அம்மாணவி வீட்டுக்குச் சென்று இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, அம்மாணவியின் பெற்றோர் புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, பாலகணேஷை புதன்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai