சுடச்சுட

  

  வீட்டில் பள்ளம் அமைத்து சாராயம் பதுக்கிய தம்பதி கைது

  By கடலூர்,  |   Published on : 19th December 2014 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் புதுப்பாளையம் பகுதியில் வீட்டில் பள்ளம் அமைத்து சாராயம் பதுக்கிய தம்பதியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  கடலூர் புதுப்பாளையம் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக புதுநகர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதவி ஆய்வாளர் குமாரதேவன் தலைமையிலான போலீஸார் புதுப்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கெடிலம் ஆற்றுப்படுகை பகுதியில் திருநங்கைகள் சிலர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

  அவர்களை கண்காணித்த போலீஸார் அவர்களுக்கு சாராயம் விநியோகிக்கும் நபரின் வீட்டை கண்டுபிடித்தனர். இதையடுத்து, புதுப்பாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்த செ.முருகன் (32) என்பவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். ஆனால், சாராயம் இருப்பதற்கான எந்தத் தடயமும் அங்கு கிடைக்கவில்லை.

  எனினும், போலீஸார் தீவிர சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்த கிரைண்டருக்கு கீழே சிறிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு அதில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கிருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார் சாராயத்தை பாக்கெட் செய்ய பயன்படுத்தும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

  இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து முருகன், அவரது மனைவி அஞ்சலாட்சி (28) ஆகியோரை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai