Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலை.யில் காளான் வளர்ப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை.யில் காளான் வளர்ப்பு பயிற்சி

    By சிதம்பரம்,  |   Published on : 20th December 2014 02:59 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலுள்ள கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில், மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழக உதவியுடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான ஒரு மாத கால காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

    முகாமை பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் முனைவர் ஜெ.வசந்தகுமார் தொடங்கி வைத்து, காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

    கடல் அறிவியல் புல முதல்வர் பேராசிரியர் கே.கதிரேசன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டம் எம்.எஸ்.சாலைவல்லான், காளான் வளர்ப்பு மற்றும் அதன் மூலம் சுய வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளை பற்றி விளக்கினார்.

    இணைப் பேராசிரியர் மு.கலைச்செல்வன் காளான் வளர்ப்புக்கான நவீன தொழில்நுட்பம் பற்றி விளக்கமளித்தார். இப்பயிற்சியில் 25 பெண்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai