சுடச்சுட

  

  ஆதிதிராவிடர் ஈமச் சடங்கு நிதி: விண்ணப்பிக்க அழைப்பு

  By கடலூர்,  |   Published on : 20th December 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், அவர்களின் இறுதிச் சடங்கிற்காக இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

  அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்துக்கு 2014-2015ஆம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  எனவே கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர்கள் யாரேனும் இறந்து விட்டால், இறுதிச் சடங்கு உதவித்தொகை பெற சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai