சுடச்சுட

  

  என்எல்சி தலைவருக்கு சிறந்த தலைமை அதிகாரி விருது

  By கடலூர்  |   Published on : 20th December 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு உன்னதமான தொழிலுறவை நிலைநிறுத்தி வரும் அதிகாரிக்கான விருதையும், என்எல்சி நிறுவனத்துக்கு தொழில்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்துக்கான விருதையும் இந்திய பொறியாளர் கழகம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

  இந்திய பொறியாளர் கழகம் சார்பில் 29-ஆவது இந்தியப் பொறியியல் மாநாடு, ஐதராபாதிலுள்ள இந்திய பொறியாளர் கழகத்தின் ஆந்திர மாநில மையமான விஸ்வேஸ்வரய்யா கலையரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  இம்மாநாடு 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

  மாநாட்டில் நெய்வேலி என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு, உன்னதமான தொழிலுறவை நிலைநிறுத்தி வரும் தலைமை அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதிபெற்ற, மிகப்பெரிய பொறியியல் துறை சார்ந்த நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு தலைமைப் பொறுப்பேற்று, அந்நிறுவனத்தை திறம்பட வழிநடத்தி வருவதற்காக இந்த விருது பி.சுரேந்திரமோகனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  விருது பெற்றபின் பி.சுரேந்திரமோகன் பேசியதாவது:

  கடுமையான இயற்கை சவால்களுக்கு நடுவே பணியாற்றி வரும் என்எல்சி ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புதான் இந்த சிறப்புமிக்க விருதினைப்பெற நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம்.

  மேலும், என்எல்சி நிறுவனம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சுரங்கம் மற்றும் மின் உற்பத்தித் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதன் மூலம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பான மின்சக்தியை வழங்கி, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்து வருகிறது என்றார்

  அவர்.

  நிகழ்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டி, 2014-ஆம் ஆண்டுக்கான தொழிற்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது.

  என்எல்சி தனது சிறப்பான செயல்பாட்டால், தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருவதைப் பாராட்டி, இவ்விருது வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai