Enable Javscript for better performance
காவல் உதவி மையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவல் உதவி மையம் திறப்பு

    By விருத்தாசலம்,  |   Published on : 20th December 2014 03:15 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலத்தில் காவல் உதவி மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    விருத்தாசலம் பாலக்கரை, நகரின் முக்கியப் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அனைத்துக் கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல், உழவர் சந்தை, அம்மா உணவகக் கட்டடம், அம்பேத்கர் சிலை ஆகியவை இப்பகுதியில் அமைந்துள்ளன.

    இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த பாலக்கரை பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதிகா மையத்தைத் தொடங்கிவைத்தார். இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் அன்பரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai