சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய 8 மையங்களில் 187 தேர்வுக் கூடங்களில் நடைபெறுகின்றன. 56,678 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

  தேர்வை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்த வினா புத்தகம் மற்றும் விடைத்தாள்கள், மாவட்ட கருவூலத்தில் போலீஸாரால் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

  தேர்வர்கள் எளிதில் தேர்வு மையங்களைச் சென்றடைய ஏதுவாக கூடுதலான பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

  மேலும், அவர் கூறுகையில், அனைத்து தேர்வுக்கூடங்களிலும் தேர்வர்கள் வசதிக்காக தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க சார் ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் துணை ஆட்சியர்கள் தலைமையில் 13 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களும் விடியோ கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படும். பதற்றமான 4 தேர்வுக்கூடம் வெப் கேமரா மூலமாக கண்காணிக்கப்படுகிறது. தேர்வர்கள் தேர்வு கூடத்துக்கு கைப்பேசி, மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்து வர அனுமதியில்லை என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai