சுடச்சுட

  

  கேபிள் டிவி கட்டணத்தை ரூ.150-ஆக உயர்த்தக்கோரி சென்னையில் வரும் 23-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

  இதில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் சுரேந்தர், செயலர் ஆர்.ஆனந்தன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

  அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 9.12.2014 அன்று சேலத்தில் நடைபெற்ற பொது நலச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், கேபிள் டிவி மாத கட்டணத்தை ரூ.150-ஆக உயர்த்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

  அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள மாத கட்டணம் குறைவாக உள்ளது. கேபிள் டிவி சாதனங்கள், பணியாளர் சம்பளம், மின் கட்டணம் போன்ற செலவுகள் அதிகரித்து வருவதால், கேபிள் டிவி கட்டணத்தை நாள் ஒன்றுக்கு ரூ.5 வீதம் மாதத்துக்கு ரூ.150-தாக உயர்த்த வேண்டியுள்ளது.

  இதனை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வரும் 23-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடக்க உள்ள உண்ணாவிரதத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai