சுடச்சுட

  

  திட்டக்குடியை அடுத்த தச்சூரில், சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில், சாலையில் நாற்று நடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  திட்டக்குடியை அடுத்த எழுத்தூரில் இருந்து தச்சூர் வழியாக, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளுக்குச் சாலை வசதி உள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இச்சாலையால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பயனுள்ளதாய் இருந்தது.

  குண்டும் குழியுமாகக் கிடந்த இந்த சாலை அண்மையில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பயனற்ற நிலைக்கு

  மாறியது.

  இதுகுறித்து அனைத்துத் தரப்பினரும் பல முறை முறையிட்டும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் வெள்ளிக்கிழமை திடீரென இச்சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்த ராமநத்தம் காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai