சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கடலூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலர்கள் த.ஸ்ரீதர், ப.குணத்தொகையன், ஒன்றிய அமைப்பாளர் க.சித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கோரி ஜனவரி 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது. கடலூரில் அம்பேத்கர் சிலைக்கு கூண்டு அமைக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  நகரச் செயலர் பாவாணன், மாவட்ட அமைப்பாளர்கள் தெ.செல்வம், ப.தமிழரசன், ச.முத்து, பா.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai