சுடச்சுட

  

  பண்ருட்டி ஒன்றியம் விசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

  பண்ருட்டி வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் நகர கிளை அமைப்பு, திருவண்ணாமலை ஸ்ரீ இரமண மகரிஷி கண் மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இந்த இலவச கண் சிகிச்சை மற்றும் விழிலென்ஸ் பொருத்தும் முகாமை நடத்துகின்றன.

  முகாமில் கண் சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாகப் பரிசோதனை செய்யப்படும். திருவண்ணாமலை ஸ்ரீ இரமண மகரிஷி கண் மருத்துவமனையில் லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும். உணவு, தங்கும் இடம், மருந்து, பஸ் வசதி இலவசம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai