பாகிஸ்தான் சம்பவம்: பள்ளி மாணவர்கள் அஞ்சலி
By சிதம்பரம் | Published on : 20th December 2014 03:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாகிஸ்தானில் ராணுவப் பள்ளியில் மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 138-க்கும் மேலான மாணவர்களின் ஆத்மா சாந்தியடைய, சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
இங்கு அரையாண்டுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்குவதற்கு முன்னதாக 3 நிமிடங்கள் மாணவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளி முதல்வர் ஜி.சக்தி, துணை முதல்வர் ஷீலா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு: இதேபோல் சிதம்பரம் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சிதம்பரம் கிளை சார்பில் ஓய்வூதியர் தின விழா தெற்கு வீதியிலுள்ள அறுபத்துமூவர் குருபூஜை மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஓய்வுபெற்ற மின் ஊழியர் நல அமைப்பு மாவட்ட பொருளாளர் ஏ.தண்டபாணி தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சிதம்பரம் வட்டத் தலைவர் ஆர்.லட்சுமணன், வட்டச் செயலர் என்.கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட துணைத் தலைவர் கே.என்.பன்னீர்செல்வன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் டி.கணேசன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் டி.புருஷோத்தமன், மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.