சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.

  கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலும் குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவி வருகிறது.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை விபரம்( மில்லி மீட்டரில்): சிதம்பரம் 3.60, கடலூர் 0.60, காட்டுமன்னார்கோயில் 50, தொழுதூர் 19, முஷ்ணம் 18, விருத்தாசலம் 2.50, கொத்தவாச்சாரி 6, வானமாதேவி 1, அண்ணாமலை நகர் 2.40, சேத்தியாதோப்பு 9, புவனகிரி 4, மீ.மாத்தூர் 15, குப்பநந்தம் 3.40, லாக்கூர் 26, பாலந்துறை 28.

  கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் 4-வது நாளாக வெள்ளிக்கிழமையும் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லவில்லை. இதனால் 4 நாள்களாக அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai