சுடச்சுட

  

  விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை விளக்கி அண்மையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

  புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்தும், இயற்கை வேளாண்மையால் ஏற்படும் பயன்களை விளக்கியும் தாயகம் கலைக் குழு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  இதில் கரகாட்டம், தப்பாட்டம், நாடகம் ஆகியவற்றின் மூலம் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் வீரமுத்து, புதுவாழ்வுத் திட்ட அலுவலர் கருப்புசாமி, கலைக் குழுவினர் சிவகுமார், வீரமுத்து, ரேவதி உள்பட கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai